ஓட்டல் ஊழியர் அடித்துக் கொலை - இருவர் கைது...

பண்ருட்டி அருகே நண்பர்களுடன் மது அருந்தியபோது, ஏற்பட்ட தகராறில் ஓட்டல் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஓட்டல் ஊழியர் அடித்துக் கொலை - இருவர் கைது...

கடலூர் | பண்ருட்டி அடுத்துள்ள நடுமேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்கொழுந்து (24). இவர் காடாம்புலியூரில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் வேலைக்கு சென்று விட்டு வரும் வழியில் அதே ஊரை சேர்ந்த தனது நண்பர்களான கார்மேகம் (20), அபினேஷ் (21) ஆகியோருடன் சேர்ந்து கொண்டு மது அருந்தினார்.

அப்போது ஏற்பட்ட தகராறில் கார்மேகம், அபினேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து சிவக்கொழுந்துவை உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் மயங்கி விழுந்த அவரை வீட்டின் அருகே  வீசிவிட்டு விபத்தில் சிக்கியதாக குடும்பத்தாரிடம் தெரிவித்துச் சென்றனர்.

மேலும் படிக்க | எலும்பு கூடுகளாக மீட்கப்பட்ட காணாமல் போன மாணவி...

படுகாயம் அடைந்த சிவக்கொழுந்துவை உறவினர்கள் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவக்கொழுந்து உயிரிழந்தார். இது குறித்து தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி காடாம்புலியூர் போலீசில் பெற்றோர் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நண்பர்கள் கார்மேகம், அபினேஷ் ஆகிய இருவரையும் கைது விசாரணை மேற்கொண்டதில் மது அருந்தும் பொழுது நண்பர்களிடையே  ஏற்பட்ட மோதலால் தாக்கப்பட்டதில் சிவக்கொழுந்து உயிரிழந்ததாக விசாரணையில் தெரிய வந்தது அதனை அடுத்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்,

மேலும் படிக்க | புதுமணப்பெண் தற்கொலை முயற்சி... போலீசார் விசாரணை...