நூல் வியாபாரியின் வீட்டில் கைவரிசை :  சிசிடிவி காட்சியால் சிக்கிய பக்கத்து வீட்டு பெண் !!

நூல் வியாபாரியின் வீட்டில் கைவரிசை காட்டி 6 சவரன் தங்க நகைகள் ரூ 1.30 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் பக்கத்து வீட்டில் குடியிருந்து வரும் பக்கத்து வீட்டு பெண் கைது.

நூல் வியாபாரியின் வீட்டில் கைவரிசை :  சிசிடிவி காட்சியால் சிக்கிய பக்கத்து வீட்டு பெண்  !!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஏ அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் 34. இவர் தனது மனைவி ஜாஸ்மின் பிரியங்கா மற்றும் ஒரு மகனுடன் குடியிருந்து கொண்டு வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ 1.30 லட்சம் ரொக்கப் பணம் மாயமானது.

இதுகுறித்து  வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை பரிசோதித்து பார்த்தபோது அவர்களது வீட்டின் அருகில் இருந்து குடியிருந்து வரும் பனியன் தொழிலாளி வினோத் என்பவரது மனைவி மரகதம் தங்களது வீட்டிற்கு வந்து யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு நோட்டமிட்ட வாரே பீரோவில் வைத்திருந்த நகையையும் பணத்தையும் கொள்ளையடித்துவிட்டு பீரோ முன்பிருந்தது போல் பூட்டிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிலிருந்து வெளியேறி அவரது வீட்டிற்கு சென்ற காட்சிகள்  பதிவாகியிருந்தன.

இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டே நூல் வியாபாரி பாஸ்கரன் பல்லடம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து கணவன், மனைவி இருவரையும் பிடித்து பல்லடம் போலீசார் தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர். அதில் மரகதம் நகையையும் பணத்தையும் திருடியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து மரகதத்தை கைது செய்த பல்லடம் போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

பக்கத்து வீட்டில் குடியிருந்து கொண்டு நூல் வியாபாரியின் வீட்டில் பணப்புழக்கம் இருப்பதை நோட்டமிட்டு உண்ட வீட்டிற்கே துரோகம் செய்த பெண்ணொருவர் இருவரது கண்களில் இருந்து தப்பி கொண்டு மூன்றாவது கண்ணில் மாட்டி(சிசிடிவி) தற்போது சிறையில் கம்பி என்னும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இச்சம்பவம் அறிமுகம் இல்லாத நபர்களை வீட்டிற்குள் அறவே அனுமதிக்கக் கூடாது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.