காதலி கண் முன்னே அடித்துக் கொல்லப்பட்ட காதலன்... துடிதுடித்து உயிரைவிட்ட கொடுமை!!

நத்தம் அருகே காதலி கண் முன்னே காதலனை காதலியின் உறவினர்கள் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலி கண் முன்னே அடித்துக் கொல்லப்பட்ட காதலன்... துடிதுடித்து உயிரைவிட்ட கொடுமை!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புதுப்பட்டி கைபைபுரத்தை சேர்ந்தவர் சேதுராஜன். இவரது 21வயது  மகன் பாரதிராஜா கேட்டரிங் படித்துவிட்டு சிறுமலையில் உள்ள தனியார் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

பாரதிராஜா மூங்கில்பட்டி முல்லைநகரை சேர்ந்த ராசு 20 வயதான மகள் பரமேஸ்வரியை கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் காதலித்த விபரம் பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்தது. இதையடுத்து பரமேஸ்வரியை அவரது பெற்றோர்கள் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

 இதை அறிந்த  பாரதிராஜா மூங்கில்பட்டி முல்லை நகர் பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் தனது நண்பர்களுடன் நேற்று இரவு சென்றார். அங்கு பரமேஸ்வரியை தொடர்புகொண்டு வரச் சொல்லி இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

 இதையறிந்த பரமேஸ்வரியின் பெற்றோர்கள், அண்ணன் மலைச்சாமி மற்றும் உறவினர்கள் ஆகியோர் போய் பாரதிராஜாவிடம் வீட்டு அருகே தகராறு செய்துள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த மலைச்சாமி அருகில் இருந்த கல்லை எடுத்து பாரதிராஜாவை தாக்கியுள்ளார்.

 உயிருக்கு போராடிய பாரதிராஜாவை  ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பினர். ஆனால் போகும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.தகவலறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவம் குறித்து அறிந்த திண்டுக்கல் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன், நத்தம் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

திண்டுக்கல்லில் பரபரப்பு காதலியின் பெற்றோர்கள் அண்ணன் மற்றும் உறவினரை ஆகியோரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் காதலியின் கண் முன்னே காதலன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.