சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையின் நண்பர் :  தற்கொலைக்கு முயற்சித்த சிறுமி !!

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே தந்தையின் நண்பரே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தற்கொலை முயற்சிக்கு தூண்டியதால் போக்சோ சட்டத்தில் ஒருவர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையின் நண்பர் :  தற்கொலைக்கு முயற்சித்த சிறுமி !!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சொக்கநாதன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 45 வயதுடைய ஜெயபால். ஆடு வியாபாரம் மற்றும் வட்டிக்கு பணம் விட்டு சம்பாதிக்கும் தொழில் செய்து வந்த இவருக்கும் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செட்டிகுளம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் வியாபாரம் தொடர்பாக நட்பு இருந்துள்ளது. ஜெயபால் ஆழ்வார்குறிச்சி சென்றபோது  தனது நண்பரின் 15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

ஜெயபாலின் தொந்தரவு தாங்காத அந்த சிறுமி தான் அணிந்திருந்த உடையில் தீ வைத்து தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

விசாரணையில் ஜெயபால் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் ஜெயபால் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.