ஆபாச வீடியோ எடுத்ததை தட்டிக்கேட்டதால் வெறிச்செயல்

ஆபாச வீடியோ எடுத்ததை தட்டிக்கேட்டதால் வெறிச்செயல்

பெண்கள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த இளைஞரை தட்டி கேட்டதால் நண்பர்களை அழைத்து வந்து உருட்டுக்கட்டையால் பெண்களை தாக்கிய வீடியோ வெளியாகி உள்ளது.

வேடசந்துரை அடுத்த தட்டாரப்பட்டியை சேரந்த இளைஞர் ஓருவர், பெண்கள் குளித்து கொண்டிருந்ததை வீடியோ எடுத்ததாக தெரிகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பெண்களும் உறவினர்களும் அந்த  இளைஞரை தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்  தனது சக நண்பர்களை அழைத்து வந்து பெண்களையும் உறவினர்களையும் உருட்டுகட்டையால் சரமாரி தாக்கினார்.இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலிசார் தேடி வருகின்றனர்.