போலி டிக்கெட்டுகள் மூலம் ரூ.90 லட்சம் மோசடி - 4பேர் கைது!

சேலத்தில் பிரபல திரையரங்கில் போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்து 90 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த திரையரங்கு மேலாளர் கூட்டாளிகளோடு கைது செய்யப்பட்டார். 

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ஏ.ஆர்.ஆர். எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 65 ஆயிரம் போலி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதையும் படிக்க : விஸ்வாவை என்கவுண்ட்டாில் போட்டு விடவா? உதவி ஆய்வாளா் வீடியோ வைரல்!

இதுகுறித்த புகாரின் பேரில் 90 லட்சம் வரை மோசடி நடந்திருப்பதை கண்டுபிடித்த போலீசார், திரையரங்கு மேலாளர் கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகளான வெங்கடாசலம், முருகன், ஏழுமலை ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.