பலகோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் தருவதாக கூறி மோசடி.. பணத்தை திரும்ப கேட்ட 2 பேருக்கு அடி உதை.. 2 பேர் கைது!!

பண்ருட்டி அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் தருவதாக கூறி மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பலகோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் தருவதாக கூறி மோசடி.. பணத்தை திரும்ப கேட்ட 2 பேருக்கு அடி உதை..  2 பேர் கைது!!
Published on
Updated on
1 min read

ராணிப்பேட்டை அருகே உள்ள சாத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் ஷகிர். இவர் சென்னையில் எலக்ட்ரிஷியனாக வேலை பார்த்த போது அவருக்கு தாம்பரத்தை சேர்ந்த ராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் பண்ருட்டி புலவன் குப்பத்தை சேர்ந்த உலகநாதன், நெய்வேலியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் ஆகிய 2 பேரை ஷகீருக்கு ராஜன் அறிமுகம் செய்து இவர்களிடம் விலை மதிக்கத்தக்க இரிடியம் உள்ளதாகவும், இதை குறைந்த விலைக்கு வாங்கினால் கோடிக்கணக்கில் விற்று பணம் சம்பாதிக்கலாம் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதை நம்பிய ஷகீர் தனது உறவினர் சீனிவாசனுடன் சேர்ந்து  மூன்று லட்சம் ரூபாய்க்கு இரிடியத்தை விலை பேசி  முதல் தவணையாக இரண்டரை லட்சம் ரூபாயை, ராஜன் மூலமாக உலகநாதனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சந்தேகமடைந்த  பணத்தை திரும்ப கேட்டதனால் ஆத்திரமடைந்த, உலகநாதன் கும்பல் ஷகீர், சீனிவாசன தாக்கியதாக தெரிகிறது.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் இரிடியம் மேசாடி கும்பலை கைது செய்தனர். மேலும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த சென்னை தாம்பரத்தை சேர்ந்த ராஜன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com