ஓ.எல்.எக்ஸ். மூலம் விளம்பரம் செய்து மோசடி... போலி ராணுவ அதிகாரியை தேடும் போலீஸ்...
ஓ.எல்.எக்ஸ். மூலம் விளம்பரம் செய்து குறைந்த விலைக்கு வாகனம் தருவதாக மோசடி

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் ஓ.எல்.எக்ஸ். இணையதளம் மூலம் குறைந்த விலைக்கு வாகனங்கள் விற்பனை செய்வதாக மோசடி செய்த போலி ராணுவ அதிகாரியை போலீசார் தேடி வருகின்றனர். மணலி குப்பு தெருவை சேர்ந்த மாயாண்டி, பழைய இருசக்கர வாகனம் வாங்குவதற்காக இணையதளத்தில் தேடியுள்ளார்.
அப்போது பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் வசிக்கும் சிவசாந்த் மல்லப்பா என்பவர், தம்மை ராணுவ அதிகாரி என்றும், தற்போது மாற்றலாகி செல்வதால் தமது இருசக்கர வாகனத்தை விற்பனை செய்வதாகவும் விளம்பரம் செய்திருந்தார்.
இதனை பார்த்து உண்மை என்று நம்பிய மாயாண்டி, ஹோண்டா ஆக்டிவா 5ஜி வாகனத்தை வாங்குவதற்கு, 24 ஆயிரம் ரூபாயை கூகுள் பே மூலம் அவருக்கு அனுப்பியுள்ளார். ஆனால் இருசக்கர வாகனத்தை தராமல் அவர் காலம் தாழ்த்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தாம் ஏமாற்றப்படுவதை உணர்ந்த மாயாண்டி, மாதவரம் பால்பண்ணை துணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.