திமுக முன்னாள் எம்.பி. கொலை வழக்கு... ஜாமீன் மனு தள்ளுபடி!!!

திமுக முன்னாள் எம்.பி. கொலை வழக்கு... ஜாமீன் மனு தள்ளுபடி!!!

தி.மு.க. முன்னாள் எம்.பி டாக்டர் மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி கூடுவாஞ்சேரி அருகே மர்மமான முறையில் உயிரிழந்தார்.  இந்த  நிலையில், டாக்டர் மஸ்தான் சாவில் மர்மம் உள்ளதாக அவரது மகன் அளித்த புகாரின் அடிப்படையில் மஸ்தானின் கார் டிரைவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டாக்டர் மஸ்தான் கொலையில் அவரது தம்பிக்கும் தொடர்பு இருப்பது  தெரிய வந்தது.  இதனையடுத்து அவரது தம்பியான கவுஸ்  ஆதம் பாஷாவும் கைது செய்யப்பட்டார்.  இந்த நிலையில், கவுஸ் அஷாம்  பாஷா ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்த வழக்கு இன்று நீதிபதி தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தபோது,  மஸ்தானின் மகன் ஹரிஸ் ஷாநவாஸ்  தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுராஜ், டாக்டர் மஸ்தான் கழுத்தை நெரித்து  கொலை செய்யப்பட்டுள்ளதாக தடயவியல் துறை அறிக்கை அளித்துள்ள நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார்.

காவல்துறை தரப்பிலும், விசாரணை ஆரம்ப கட்ட நிலையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கவுஸ் ஆதம் பாஷாவின் ஜாமீன் மனுவை  தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிக்க:   ஈரோடு வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு..!!