இரண்டு ஆண்டுகளாக போலி கையெழுத்து... ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை!!

இரண்டு ஆண்டுகளாக போலி கையெழுத்து... ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை!!
Published on
Updated on
1 min read

திமுக நிர்வாகிகள் தலையிட்டு போலியான கையெழுத்தை போட்டு பணத்தை கொள்ளையடித்து செல்வதாகவும் கூறியுள்ளார் ஊராட்சி மன்ற தலைவர் செல்வபாங்கியம்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றுக்கு உட்பட்ட, சித்தாமூர் கிராம பஞ்சாயத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த பெண் தலைவர் செல்வபாங்கியம் என்பவர் இருந்து வருகிறார்.  இந்த கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் மாற்று சமூகத்தைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதால் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு அடிப்படையில் ஆதிதிராவிடர் சமூகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு செல்வபாங்கியம் என்பவர் வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். மாற்று சமூகத்தை சேர்ந்த சகுந்தலா மோகன், துணைத் தலைவராக இருந்து வருகிறார்.

ஊராட்சி மன்ற தலைவராக இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரையில் எந்த ஒரு திட்டப் பணிகளிலும் நான் கையெழுத்திட்டதில்லை என்றும் எனக்கு தெரியாமல் மாற்று சமூகத்தைச் சேர்ந்த துணைத் தலைவர் சகுந்தலா மோகன் ,மாற்று சமூகத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள் தலையிட்டு போலியான கையெழுத்தை போட்டு பணத்தை கொள்ளையடித்து செல்வதாகவும் கூறியுள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் கழிவுநீர் கால்வாய் நூலக கட்டிடம் கிராமத்தில் கட்டப்படும் பாலப்பணி குறித்து  அனைத்து பணிகளும் ஊராட்சி மன்ற தலைவருக்கு தெரியாமலே நடைபெறுவதாகவும் தெரிகிறது.  இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.  இவை அனைத்துமே வேற ஒரு மாற்று சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சகுந்தலா மோகன் அவர்கள் உத்தரவின் பேரில் திமுக நிர்வாகிகள் காண்ட்ராக்ட் வொர்க் செய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com