சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு : போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் கைது !!

2வது நாளாக தொடர்ந்து எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 11 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 183 கிராம் கோக்கைன்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு : போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் கைது !!

ரகசிய தகவல்

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை முதன்மை கமிஷனர் உதய் பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் விமான பயணிகளை கண்காணித்தனர்.

எத்தியோப்பிய விமானம்

அப்போது எத்தியோப்பியாவில்  இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது அங்கோலா நாட்டை சேர்ந்த பிபியனா டா கோஸ்டா (59) என்ற பெண்ணை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். சுற்றுலா விசாவில் சென்னை வந்ததாக கூறினார். மேலும் அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினார். 

அங்கோலா நாட்டுப்பெண்

இதையடுத்து அவரது உடமைகளை சோதனை செய்த போது அதில் விலையுர்ந்த போதை பவுடர் மறைத்து வைத்து இருந்ததை கண்டு பிடித்தனர். ரூ.11 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 183 கிராம்  கோக்கைன் போதை பவுடரை  பறிமுதல் செய்தனர். இவற்றை கடத்தி அங்கோலா நாட்டு பெண்ணை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், யாருக்காக கடத்தி வந்தார்.  இதன் பிண்ணனியில் உள்ளவர்கள் யார்? சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? சென்னையில் உள்ள கடத்தல் போதை கும்பல் யார் என  சுங்கத்துறை அதிகாரிகள்  விசாரித்து வருகின்றனர். 

ஒரே வாரத்தில் இத்தனை கோடியா?

சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் ரூ.100 கோடி மதிப்புள்ள கோக்கைன் மற்றும் ஹெராயின் போதை பொருள் பிடிப்பட்ட நிலையில் தொடர்ந்து 2வது நாளாக கோக்கைன் பிடிப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.123 கோடி மதிப்புள்ள கோக்கைன், ஹெராயின் பிடிப்பட்டு வெனிசூலா நாட்டு பெண், அங்கோலா நாட்டு பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.