பட்டப்பகலில் ஃபைனான்சியர் ஓட ஒட விரட்டி கொலை :  6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல் !!

சென்னை செனாய் நகரில் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் ஃபைனான்சியர் ஓட ஒட விரட்டி கொலை :  6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல் !!

சென்னை அமைந்தகரை செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று மதியம் இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது மூன்று இருசக்கர வாகனங்களில் பிந்தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவரை சரமாரியாக வெட்டி தப்பிச்சென்றனர். வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையிலேயே வெட்டிவிட்டு அந்த கும்பல் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

படுகாயமடைந்த அந்த நபர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அமைந்தகரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து கொலை வழக்குபதிவு செய்த அமைந்தகரை போலீசார் வீடியோவை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்த நபர் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த ஆறுமுகம்(36) என்பதும், இவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருவது தெரியவந்தது.

இவர்  மீது ஏற்கனவே கீழ்ப்பாக்கம், டி.பி சத்திரம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல், ஆயுத தடை சட்டம், பெண் வன்கொடுமை சட்டம் உட்பட 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. கொலை நடந்த இடத்திற்கு அருகேயுள்ள சிசிடிவி காட்சிகளை தனிப்படை போலீசார் கைப்பற்றி கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.