நிறுவன உரிமையாளரிடம் ஆசைவார்த்தைக்கூறி 15 கோடி ரூபாய் மோசடி செய்த தந்தை - மகன் கைது!! எப்படி தெரியுமா?

நிறுவன உரிமையாளரிடம் ஆசைவார்த்தைக்கூறி 15 கோடி ரூபாய் மோசடி செய்த தந்தை - மகன் கைது!! எப்படி தெரியுமா?

சென்னையில் இரும்புப் பொருட்களை குறைந்த விலைக்கு விநியோகம் செய்வதாக கூறி 15 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட தந்தை- மகனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைதுசெய்தனர்.

நுங்கம்பாக்கத்தை சேர்ந்த மணிராம் சர்மா என்பவர் இரும்பை கொண்டு பல்வேறு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்திற்கு சென்ற ரித்தேஷ் ராய் என்பவர் குறைந்த விலைக்கு இரும்பு விநியோகம் செய்வதாக கூறி ஒப்பந்தம் போட்டுள்ளார்.

இதனை நம்பி வங்கி மூலம் 15 கோடியே 20 லட்சம் ரூபாயை ரித்தேஷ் ராய் மற்றும் அவரது தந்தை வங்கி கணக்கிற்கு மணிராம் சர்மா செலுத்தியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட ரித்தேஷ் ராய் அதற்குரிய இரும்பை அனுப்பிவைக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் மணிராம் சர்மா புகார் அளித்தநிலையில் ஈச்சம்பாக்கம் பகுதியில் மறைந்திருந்த ரித்தேஷ் ராய் மற்றும் அவரது தந்தை ராஜீவ் ராய் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.