11 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை கைது!!!!

11 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை கைது!!!!

அசாம் மாநிலம் நாகோனில் தனது சொந்த மகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

அசாம் மாநிலம் நாகோனில் சொந்த மகளையே பலமுறை பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளார் தந்தை.  இதனை அறிந்த தாய் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து தந்தை தலைமறைவானார்.  போலீஸாரால் தொடர்ந்து தேடப்பட்டு வந்த நிலையில் பல நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டு சிறைக்காவலில் வைக்கப்பட்டார்.  

ஆனால் அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.  ஜாமீனில் வெளியே வந்த பிறகும் மகளை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.  இதனால் தாயார் மீண்டும் புகார் கொடுத்த நிலையில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்தனர்.  குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அங்கிருந்து அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.