
கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த அறிவழகன் மீது விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி, வெடிகுண்டு வீச்சு உள்ளிட்ட 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேலும் 2018ம் ஆண்டு ஜாமினில் வெளியே வந்த அவர் பின்னர் தலைமறைவான நிலையில் கடந்த மாதம் வழிப்பறியில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் மாவட்ட எஸ்.பி ஸ்ரீ நாதாவின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவுபடி அறிவழகன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு,சிறையில் அடைக்கப்பட்டார்.