"உல்லாசம் அனுபவித்து வந்த கள்ளகாதலர்கள்".. தூக்கில் பிணமாக தொங்கிய சிறுவன்.. திக் திக் சம்பவம்!!

கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்ததை சிறுவன் ஒருவன் நேரில் பார்த்ததால் கள்ளக்காதலர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"உல்லாசம் அனுபவித்து வந்த கள்ளகாதலர்கள்".. தூக்கில் பிணமாக தொங்கிய சிறுவன்.. திக் திக் சம்பவம்!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கலிகிரி அட்டவாரிபள்ளியை சேர்ந்த சிறுவன் உதய் கிரண். 3-ம் வகுப்பு படித்து வரும் இந்த சிறுவன் கடந்த 12-ந் தேதி மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளான். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை சோதனை செய்ததில் கொலை செய்து தூக்கில் விட்டது தெரியவந்தது.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் சிறுவனின் உறவினர்களான சகாதேவன், ராஜேஸ்வரி ஆகியோர் மீது சந்தேகப்பட்ட போலீசார், அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. அது பற்றி போலீசார் கூறும்போது, 

சகாதேவன் மற்றும் ராஜேஸ்வரி இருவரும் கள்ளக்காதலர்கள் என்பது  போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்ததை சிறுவன் உதய் கிரண் நேரில் பார்த்ததால், அதிர்ச்சி அடைந்த கள்ளக்காதலர்கள் இதை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி உள்ளனர். ஆனால் அதற்கு சிறுவன் மறுப்பு தெரிவிக்கவே, இதனால் ஆத்திரம் அடைந்த கள்ளக்காதலர்கள் சிறுவனின் பிறப்பு உறுப்பு மீது சரமாரியாக தாக்கி பின்னர் கழுத்தை இறுக்கி கொலை செய்து உள்ளனர்.

பின்னர் கொலை செய்யப்பட்ட சிறுவனின் உடலை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மரத்தில் தொங்க விட்டது விசாரணையில் தெரியவந்தததாக தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சிறுவனை கொன்ற கள்ளக்காதலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.