கள்ளக்காதலனுக்கு தீ வைத்த கள்ளக்காதலி..? வீடியோ வெளியாகி அதிர்ச்சி!!    

பெரியார் நகரில் கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட தகராறில் தீக்குளித்த வாலிபர் பரிதாப பலியான நிலையில், கொலையா தற்கொலையா கள்ளக்காதலியை பிடித்து பல்லடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்காதலனுக்கு தீ வைத்த கள்ளக்காதலி..? வீடியோ வெளியாகி அதிர்ச்சி!!      

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உள்பட்ட பெரியார் நகர் 2வது வீதியில் உடுமலையை சேர்ந்த மாணிக்கம் 38 என்பவர் வசித்து வருகிறார். கட்டிட தொழிலாளியான இவர் முதல் மனைவியை பிரிந்து கடந்த சில வருடங்களாக துர்க்கை அம்மாள் என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்றபட்டு கணவன் மனைவியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கள்ளக்காதலி மற்றும் கள்ளக்காதலனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அருகில் இருந்த பெரியவர்கள் தலையிட்டு அவர்களுக்கிடையே சமாதானம் ஏற்படுத்தியதாக தெரிய வருகிறது.இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் வீட்டில் இருந்து உடல் முழுக்க தீப்பற்றி எரிந்த நிலையில் வாலிபர் மாணிக்கம் வீதியில் ஓடி வந்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூறி கதறியுள்ளார்.

அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றி மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் தனியார் ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் 90 சதவீதம் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த மாணிக்கத்தை மேல் சிகிச்சைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு கடந்த ஒரு வார காலமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை மாணிக்கம் பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே போலீசாரிடம் அவர் அளித்த மரண வாக்குமூலத்தில் தனது உடலின் மீது கள்ளக்காதலி மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து விட்டதாக தெரிவித்ததாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பல்லடம் போலீசார் மாணிக்கம் ஏன் தீக்குளித்தார் கள்ளகாதலி தீ வைத்தது காரணமா அல்லது மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டாரா என பல கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பல்லடம் பெரியார் நகரில் வீட்டிலிருந்த கட்டிட தொழிலாளி மாணிக்கம் உடல் முழுக்க தீப்பற்றி எரியும் நிலையில் வீதியில் ஓடிவந்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பதைபதைப்பாயும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.