கஞ்சா விற்ற முன்னாள் ராணுவ வீரர் கைது.. ஒரு கிலோ கஞ்சாவும் பறிமுதல்.! 

கஞ்சா விற்ற முன்னாள் ராணுவ வீரர் கைது.. ஒரு கிலோ கஞ்சாவும் பறிமுதல்.! 

கஞ்சா விற்ற முன்னாள் ராணுவ வீரர் வீரரையும் அவரோடு 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

தஞ்சை  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய், இது குறித்து சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் தனிப்படையினர் ஒரத்தநாடு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது ஒரத்தநாடு கலைஞர் நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர் குரு(40),            யானைகார தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் மகன் அமர்நாத்(19), நவநீத கிருஷ்ணன் மகன் சதீஷ்(28) ஒரத்தநாடு சுண்ணாம்பு காரை தெருவைச் சேர்ந்த மணிமாறன் மகன் பிரசாத்(18) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் 9 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.  

அதன்பின் அவர்களை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதில் தலைமறைவாக உள்ள  கண்ணந்தங்குடி கீழையூர் கண்டபிள்ளை தெருவைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சின்ன குட்டி என்ற பூமிநாதன், ஒரத்தநாடு வடக்குத் தெருவைச் சேர்ந்த தமிழன்பன் மகன் முகேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர். 

மேலும் போலீசாரின் விசாரணையில் முதன் முதலாக வல்லத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் 83 கிலோவுக்கு மேல் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை , மதுக்கூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.