ஆர்டர் செய்த உணவு வர தாமதம்  : மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கிய போதை ஆசாமிகள்!!

ஆர்டர் செய்த உணவு தாமதமானதால் மேஜை மற்றும் நாற்காலிகளை அடித்து நொறுக்கிய போதை ஆசாமிகள்.

ஆர்டர் செய்த உணவு வர தாமதம்  : மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கிய போதை ஆசாமிகள்!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குடிபோதையில் ஓட்டல் ஒன்றில் புகுந்த 6 பேர், ஆர்டர் செய்த உணவு தாமதமானதால் மேஜை மற்றும் நாற்காலிகளை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூர் அடுத்த குளிதிகை அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் முகமது யூனுஸ் என்பவருக்கு சொந்தமான ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த ஓட்டலுக்கு நேற்றைய தினம் குடி போதையில் வந்த 6 பேர், சென்னா மசாலா மற்றும் பரோட்டோ ஆர்டர் செய்து உடனடியாக கொடுக்க வேண்டும் என கேட்டுக் தகராறில் ஈடுபட்டுள்ளனர். உணவு தாமதமான நிலையில், ஆத்திரமடைந்த அவர்கள் அங்கிருந்த மேஜை மற்றும் நாற்காலிகளை திடீரென அடித்து உடைத்துவிட்டு, ஊழியர்களையும் தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாக  கூறப்படுகிறது.

மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமராவை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.