தொழிலதிபரிடம் 5 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய டி.எஸ்.பி...! போலீசாரிடம் கையும் களவுமாக மாட்டிய தங்கவேலு !

நாகர்கோவிலில் ஐந்து லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

தொழிலதிபரிடம்  5 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய டி.எஸ்.பி...! போலீசாரிடம் கையும் களவுமாக மாட்டிய தங்கவேலு !

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்தவர் சிவகுரு குற்றாலம். டெக்ஸ்டைல்ஸ் தொழில் நடத்தி வரும் இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபருக்கும் நிலம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், வழக்கை முடித்து வைப்பதற்காக சிவகுரு குற்றாலத்திடம், மாவட்ட குற்றப் பிரிவு டி.எஸ். பி. தங்கவேல், 5 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிவகுரு குற்றாலம் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழங்கிய ஆலோசனையின் பேரில், சிவகுரு குற்றாலம் ஐந்து லட்ச ரூபாயை டி.எஸ். பி. தங்கவேலுவிடம் கொடுக்கும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் டி.எஸ். பி. தங்கவேலுவை கையும் களவுமாகப் பிடித்தனர்.

ஏற்கனவே டி.எஸ். பி. தங்கவேலு, அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் சின்னாளம்பட்டியில் உள்ள கோவிந்தபுரம் பகுதியில், நவீன பங்களா ஒன்று கட்டி உள்ளதாகவும், அது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சோதனை செய்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், டி.எஸ். பி. தங்கவேலிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.