கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறு... தடுக்க வந்த மூதாட்டிக்கு அரிவாள் வெட்டு...!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் தடுக்க வந்த மூதாட்டியின் மீது அரிவாளால் வெட்டிய பிரபு என்பவரை எடப்பாடி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறு... தடுக்க வந்த மூதாட்டிக்கு அரிவாள் வெட்டு...!

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட கவுண்டம்பட்டி சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவு. இவரது மனைவி சாந்தி, இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். லாரி ஓட்டுநராக இருக்கும் பிரபு அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

அதேபோல் நேற்று மாலை வீட்டிற்கு வந்த பிரவு வழக்கம்போல் ,மனைவியிடன் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியநிலையில் இருவருக்கும் இடையே பலத்த சண்டை உருவாகியுள்ளது. இதனை கண்ட பக்கத்துவிட்டு மூதாட்டியான கண்ணம்மா, தடுக்கமுயன்றபோது ஆத்திரமடைந்த பிரபு மறைத்து வைத்திருந்த அரிவாளால் கண்ணம்மாள் தலையில் வெட்டியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த கண்ணாமாளை அங்கிருந்தவர்கள் மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த அவரை மருத்துவர்கள் தீவிர சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த போலீசார், மூதாட்டியை வெட்டிய பிரவுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.