விமானத்தின் இருக்கையில் பசை வடிவில் கடத்திவரப்பட்ட 22 லட்சம் மதிப்புள்ள தங்கம்...பறிமுதல் செய்த அதிகாரிகள்!!

விமானத்தின் இருக்கையில் பசை வடிவில் கடத்திவரப்பட்ட 22 லட்சம் மதிப்புள்ள தங்கம்...பறிமுதல் செய்த அதிகாரிகள்!!

துபாயிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு  கடத்திவரப்பட்ட சுமார் 22 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து வந்த விமானத்தில் அதிகாரிகள் சோதனை மேற்காண்டனர்.  அப்போது விமானத்தின் இருக்கையின் கீழ் உறைக்குள் இருந்து 490 கிராம் எடையில் பசை வடிவிலான பொருளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனா்.

இதனைத்தொடர்ந்து கைப்பற்றபட்ட பசை வடிவிலான பொருளை பிரிக்கும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட பொருளில் இருந்து 22 லட்சம் மதிப்புள்ள 421 கிராம் தங்கத்தை பிரித்தெடுத்தனா்.

 மேலும் இதுக்குறித்து வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா்.