கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட தம்பதியினர் - போலீசார் விசாரணை

கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட தம்பதியினர் - போலீசார் விசாரணை

பெரம்பலூர் மாவட்டத்தில் வயதான தம்பதியினர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொண்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாணிக்கம் - மாக்காயி தம்பதியினர். இவர்களது மூன்று பெண் பிள்ளைகளும் திருமணமாகி சென்று விட்ட நிலையில், இருவரும் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை மாணிக்கம், மாக்காயி இருவரும் வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.