ரூ.35 கோடி மதிப்புள்ள அம்பர்கிரீஷ் பறிமுதல்!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே 35 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ரெயல்வேநிலையம் செல்லும் சாலையில் ஒரு காரில் சந்தேகத்திடமான பொருட்களுடன் சிலர் இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்துசென்ற  தனிப்படை காவல்துறையினர் சாலையோரத்தில் நிறுத்தியிருந்த கேரளா பதிவெண் கொண்ட இனோவா காரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வாகனத்தில் 36கிலோ எடைகொண்ட அம்பர்கிரீஸ் என்ப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீர் விற்பனைக்காக வைக்கபட்டிருந்தது தெரியவந்தது.

இவற்றின் சந்தைமதிப்பு சுமார் 35கோடி ரூபாய் எனவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அரியவகை அம்பர்கிரீஸை பறிமுதல் செய்த தனிப்படை காவல்துறையினர் அதை விற்பனை செய்ய முயன்ற கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வெள்ளாரக்கோடு பகுதியை சேர்ந்த விவேகானந்தன்(46) கொல்லம்  தலத்தலா பகுதியை சேர்ந்த நைஜூ(39),நெய்யாற்றிங்கரையை சேர்ந்த ஜெயன் (41) வெள்ளறடா பகுதியை சேர்ந்த திலீப்(26) பாலக்காடு ஒற்றப்பாலம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (50)  மற்றும் பாலக்காடு பகுதியை சேர்ந்த வீரான் (61) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த இனோவாகார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து பறிமுதல் செய்யபட்ட அம்பர்கிரீஸ் மற்றும் விற்பனை செய்யமுயன்ற 6 பேர் மற்றும் வாகனங்களைமும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

மக்கள் நடமாட்டம் அதிகமாக பகுதியில் விலையுயர்ந்த அம்பர்கிரீஷ் எனப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீரை விற்கமுயன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.