காதலிப்பதாக இளம் பெண்ணை ஏமாற்றிய ஐபிஎல் வீரர் மீது புகார்!

காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய ஐபிஎல் மற்றும் டிஎன்பிஎல் கிரிக்கெட் வீரர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தொழில்நுட்பத் துறையில் மென்பொருள் பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு ராஜகோபால் சதீஷ் என்கிற டி என் பி எல் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் வீரர் அறிமுகமாகி உள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் சதீஷ் இளம்பெண்ணை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி  கடந்த 2019 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாடு வதற்காக  சதீஷ் தன்னுடைய வீட்டிற்கு அந்த இளம் பெண்ணை அழைத்துச் சென்று கூல்ட்ரிங்க்ஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து உடலுறவு வைத்துள்ளார்.

அதன் பிறகு இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அடிக்கடி உடலுறவு வைத்துக் கொண்டுள்ளார். இதனை அடுத்து ராஜகோபால் சதீஷ்க்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருப்பது தெரிய வந்ததை கண்டு அந்த இளம் பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது தொடர்பாக இளம் பெண் தனது பெற்றோருடன் இதுவரை நடந்தவற்றை கூறியுள்ளார் உடனடியாக அப்பெண்ணின் பெற்றோர் வேறொரு நபரை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

சிறிது நாட்களில் இளம் பெண்ணிற்கும் தனது கணவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனை அடுத்து மீண்டும் கிரிக்கெட் வீரர் ராஜகோபால் சதீஷ் தன்னை மன்னித்து விடுமாறும், மீண்டும் இணைந்து வாழலாம் என கூறிவிட்டு பலமுறை இளம்பெண்ணிடம் உடலுறவு வைத்துள்ளார்.

இதன் விளைவாக கர்ப்பம் அடைந்த இளம் பெண்ணை சதீஷ் கீழ்ப்பாக்கம் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று குழந்தையை கலைத்து விடுமாறு கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக அப்பெண் தரமணி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். தகவலின் பேசியுள்ளார் ஆய்வாளர் செட்டில்மெண்ட் பேசிவிடலாம் என கூறி சமாதானம் பேசியுள்ளார். இதனை அடுத்து தீர்வு கிடைக்காமல் இருந்த இளம் பெண் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். தன்னை ஏமாற்றி கர்ப்பமாகிய ஐபிஎல் மற்றும் டிஎன்பிஎல் கிரிக்கெட் வீரர் சதீஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: "கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்" மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!