விழுப்புரம் மாவட்டம்....கல்லூரி மாணவி வெட்டிக் கொலை...!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கல்லூரி மாணவி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தரணி. தனியார் செவிலியர் கல்லூரியில் படித்து வந்த இவரும், மதுரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கணேசனும் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் காதலன் கணேசனுக்கு போதை பழக்கம் இருந்ததால் தரணி கண்டித்ததுடன் காதலை முறித்து கொண்டதாக தெரிகிறது. எனினும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கணேசன் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கு மாணவி தரணி மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் ஆத்திரமடைந்த இளைஞர் இன்று அதிகாலை தரணி கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.
இது குறித்த தகவலின் பேரில், அங்கு விரைந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை எடுத்து சென்றனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான காதலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிக்க: தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்...!!!