சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி மாணவர் தீக்குளித்து தற்கொலை!

சென்னை ஐ.ஐ.டி.யில் எலக்ட்ரிக்கல் படித்து வந்த ஆராய்ச்சி மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி மாணவர் தீக்குளித்து தற்கொலை!

சென்னை ஐ.ஐ.டி.யில் எலக்ட்ரிக்கல் படித்து வந்த ஆராய்ச்சி மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த மாணவன் உன்னி கிருஷ்ணன் எறிந்த நிலையில் ஹாக்கி மைதானத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து அவரை உடலை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் தங்கியிருந்த வேளச்சேரி விலாசத்தில் 11 பக்கம் கொண்ட தற்கொலை குறிப்பு போலீசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக மாணவன் தற்கொலை கடிதத்தில் விளக்கம் அளித்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

தொடர்ந்து உயிரிழந்த மாணவர் உன்னி கிருஷ்ணனுடன் தங்கி வந்த  கேரளாவைச் சேர்ந்த அணில் குமார், சேலத்தைச் சேர்ந்த பிரகாஷ் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உன்னி கிருஷ்ணனின் தந்தை ரகு, இஸ்ரோ விஞ்ஞானி என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி யில் இஸ்லாமிய மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது சென்னை ஐ.ஐ.டியில்  ஜாதி, மத பாகுபாடு இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.