சிடிஎஸ் நிறுவன கட்டிடம்... லஞ்சம் வாங்கிய அதிகாரிகள்!!!

சிடிஎஸ் நிறுவன கட்டிடம்... லஞ்சம் வாங்கிய அதிகாரிகள்!!!

பிரபல நிறுவனம் காக்னிசன்ட் நிறுவனத்தை கட்டுவதற்காக சிஎம்டிஏ அதிகாரிகள் 12 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது 

கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு கால கட்டத்தில் காக்னிசன்ட் அடுக்குமாடி கட்டுவதற்கு திட்டம் அனுமதி பெறுவதற்காக சிஎம்டிஏ அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

காக்னிசன்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீ மணிகண்டன், முன்னாள் தலைமை செயலாக்க அதிகாரி ஸ்ரீதர் திருவேங்கடம், காக்னிசன்ட் நிறுவனம், எல்என்டி முன்னாள் கட்டுமான பிரிவு தலைவர் ரமேஷ், மற்றும் முன்னாள் தொழில் பிரிவு தலைவர் கண்ணன் முன்னாள் செயல் துணைத் தலைவர் மற்றும் தற்போதைய மூத்த செயல் துணைத் தலைவருமான சதீஷ் உட்பட ஒன்பது பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிக்க:   உடன்பிறப்புகளாய் இணைவோம்...... விதிமுறைகளை வெளியிட்ட திமுக பொது செயலாளர் துரைமுருகன்!!!