உண்டியலை திருடி சென்ற இருவரின் சிசிடிவி வெளியீடு...

புதுச்சோியில் கோயில் உண்டியலை இருவா் உடைத்து திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

உண்டியலை திருடி சென்ற இருவரின் சிசிடிவி வெளியீடு...

புதுச்சேரி புறநகர பகுதி பாகூரை சேர்ந்தவர் கணேசன் (55), இவர் அப்பகுதியில் அமைந்துள்ள பூலோக மாரியம்மன் கோயிலின் நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று காலை கோயிலுக்கு சென்ற போது கோயிலின் உண்டியல் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது தொடர்பாக பாகூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

மேலும் படிக்க | கழிவறையில் ஆண் குழந்தை உடல் மீட்பு...

அப்போது 20 வயது மதிக்கதக்க இரண்டு வாலிபர்கள் கோயிலுக்குல் நூழைவதும் பின்னர் சிறிது நேரத்தில் கோயிலில் இருந்து வெளியே வரும் அவர்கள் உள்ளே உடைத்த உண்டியலை கையில் தூக்கி செல்வதும் பதிவாகி இருந்தது.

இதனையடுத்து இந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட போலீசார் உண்டியல் திருட்டில் ஈடுப்பட்ட வாலிபர்களை இந்த காட்சிகளின் பதிவான அடையாளங்களை கொண்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

புதுச்சேரியில் கடந்த 1 வாரத்தில் தொடர் கோயில்களில் தொடர் உண்டியல் திருடு போவது பக்தர்களிடையே கவலையை ஏற்ப்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | உதகையில் உலாவரும் சிறுத்தைகள்... வனத்துறையிடம் மக்கள் கோரிக்கை!!!