சகோதரர்களை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல்...அநியாயமாய் பலியான தம்பி!!

சிவகங்கை மாவட்டத்தில் அண்ணன் தம்பியை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதில் தம்பி பரிதாபமாக உயிரிழந்தார்.

சகோதரர்களை  அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல்...அநியாயமாய் பலியான தம்பி!!

காந்தி வீதியை சேர்ந்த சகோதரர்களான இளங்கோ மற்றும் மணிகண்டன் ஆகியோர் அப்பகுதியில் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் உணவகம் நடத்தி வந்தனர். இருவரும் உணவகத்தில் இருந்தபோது அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மணிகண்டனை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது சகோதரர் இளங்கோ அதனை தடுக்க முயற்சித்தபோது, அவரையும் அரிவாளால் வெட்டிய அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சகோதரர்கள் இருவரையும் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மணிகண்டன் உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த இளங்கோவிற்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.