விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 19 சவரன் தங்க நகை மற்றும் பணம் கொள்ளை...! மர்ம நபர்களை வலைவீசி தேடும் போலீசார்..!

விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 19 சவரன் தங்க நகை மற்றும் பணம் கொள்ளை...! மர்ம நபர்களை வலைவீசி தேடும் போலீசார்..!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே விவசாயி வீட்டில் 19 பவுன் தங்க நகை மற்றும் 15 ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்து சென்ற மா்ம நபா்களை காவல்துறையினா் தேடி வருகின்றனா்.  

செங்கம் அடுத்த கண்ணகுருக்கை பகுதியை சேர்ந்தவர் விவசாயி முருகன்,  இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். பின்னா் திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 19 பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினா்,  தீவிர விசாரணை மேற்கொண்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி  வருகின்றனா்.