மூன்றரை வயது சிறுவனை கிணற்றில் தள்ளி கொன்ற சிறுவர்கள்... சிவகாசியில் அதிர்ச்சி சம்பவம்...

சிவகாசியில் மூன்றரை வயது சிறுவன் கிணற்றில் தள்ளி தண்ணீரில் மூழ்கடித்து கொலை சிறுவர்கள் கைது.

மூன்றரை வயது சிறுவனை கிணற்றில் தள்ளி கொன்ற சிறுவர்கள்... சிவகாசியில் அதிர்ச்சி சம்பவம்...

சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் திருவள்ளுவர் நகரில் வசிப்பவர் ஓட்டுநர் பார்த்திபன் இவரது மனைவி கவி அரசி தனியார் மருத்துவமனை  கேன்டீன் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியருக்கு பிரியதர்ஷன் வயது10 மற்றும் தீனதயாளன் வயது 3 1/2 ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் வீட்டின் பின்பக்கம் உள்ள இடத்தில் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவர்களுடன் விளையாடி வந்த நிலையில் சிறுவர்கள் இடையே ஏற்பட்ட சண்டை பார்த்திபன் மற்றும் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் செல்வம் மற்றும் ரவி ஆகியோருக்கிடையே தகராறில் முடிந்தது.

இதனால் ஆத்திரமடைந்த செல்வத்தின் மகன் அஜய் வயது 11 மற்றும் ரவியின் மகன் பிரவீன் குமார் வயது 13 ஆகிய இருவரும் மூன்றரை வயது தீனதயாளன் என்ற சிறுவனை விளையாடுவதற்காக அழைத்து கிராமத்தின் ஒதுக்குப் புறத்தில் உள்ள ஒரு கிணற்றில் தள்ளி தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் வந்து விட்டனர்.

சிறுவன் தீனதயாளனை  காணாத பெற்றோர்களும் உறவினர்களும் தேடிவந்த நிலையில் சிவகாசி நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில் கொலை சம்பவம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அஜய் மற்றும் பிரவீன்குமார் ஆகிய இரண்டு சிறுவர்களையும் கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். மூன்றரை வயது சிறுவனை இரண்டு சிறுவர்கள் அழைத்துச் சென்று கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் விஸ்வநத்தம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.