ஸ்கேன் சென்டர் வாசலில் இருந்த பைக் திருட்டு :  சிசிடிவி காட்சிகளை கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை !!

சங்கராபுரம் அருகே வயிற்று வலியின் காரணமாக ஸ்கேன்  எடுக்கச் சென்றவரின் இருசக்கர வாகனத்தை திருடும் சிசிடிவி காட்சிகளை கொடுத்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார்.

ஸ்கேன் சென்டர் வாசலில் இருந்த பைக் திருட்டு :  சிசிடிவி காட்சிகளை கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை !!

கள்ளக்குறிச்சி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் குற்ற சம்பவங்களை  கட்டுப்படுத்தும் வகையில் 85 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. அதில் 64 கேமராக்கள் பழுதடைந்து வேலை செய்யாமல் உள்ளது. இதனால் காவல்துறையினர் குற்ற சம்பவங்களில் பின்னணியை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடித்து விசாரணை செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். இதன் காரணமாக கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் கட்டுப்பாட்டு  அறையில் கண்காணிக்கும் டிவிகள் நிறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி மாலை கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ரோடுபரமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் இளங்கோவன் என்பவர் வயிற்று வலியின் காரணமாக  கள்ளக்குறிச்சி நேபாள் தெருவில் உள்ள குரு ஸ்கேன் சென்டருக்கு தனது பைக்கை நிறுத்திவிட்டு ஸ்கேன் செய்ய உள்ளே சென்றுள்ளார். இளங்கோவன் வெளியே வந்து பார்த்தபோது பைக் கொள்ளை போனது தெரியவந்தது.

அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, அந்தப் பகுதியில் வந்து சிறிது நேரம் அமர்ந்த நபர் ஒருவர், சிறிதுநேரம் அமர்ந்தவாறு அந்தப் பகுதியை நோட்டம் விடுவதும், யாரும் வராதது அறிந்து கொண்டு கள்ள சாவியை போட்டு நைசாக பைக்கை தள்ளிக் கொண்டு சென்று பின்னர் சிறிது தூரம் சென்று பைக்கை ஸ்டார்ட் செய்து எடுத்துச் செல்கிறார். இதனை பைக் நிறுத்திச் சென்ற  பதிவாகி இருந்தது.

அந்த சிசிடிவி காட்சிகளுடன் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் இளங்கோவன் புகார் அளித்தும் இதுவரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யாமல், பைக் கொள்ளையனை கைது செய்யாமல் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் இதே போன்று இந்த மாதத்தில் கள்ளக்குறிச்சி சங்கராபுரம் பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் மாயமாகி அரங்கேறி வருகின்றன மேலும் இருசக்கர வாகன  கொள்ளை போயுள்ள நிலையில் காவல்துறையினர் அதனை புகாராக ஏற்று இருசக்கர வாகன கொள்ளையனை கண்டு பிடிக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்ல அச்சம் அடைந்துள்ளனர். 

எனவே  சங்கராபுரம் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதியில் பைக் கொள்ளை  நடைபெறுவதை காவல்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும். சிசிடிவி கேமராக்களை சரி செய்து குற்றவாளிகளின் ஊடுருவலை கண்காணித்து தடுக்க வேண்டும்என பொது மக்கள் இடையே அதிகமான கோரிக்கை எழுந்துள்ளது.