தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது! கர்நாடகாவில் பரபரப்பு!

ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவரை சிமோகா நகரில் கைது செய்துள்ளோம் கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா பேட்டி.

தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது! கர்நாடகாவில் பரபரப்பு!

கர்நாடகா: இன்று சிமோகா மாவட்டத்தில் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவரை கைது செய்துள்ளதாகவும் தப்பித்து ஓடி தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை தேடி வருவதாகவும் கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

சிமோகா நகரில் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதிகள் என்று சந்தேகப்படும் 3 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்பு மஸ் முனீர் அகமத் வயது 22 மற்றும் சையத் யாசின் வயது 21 ஆகிய இருவரை இன்று சிமோகா போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க | காதலனை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த காதலி!!!

இவர்களுடன் தொடர்பில் இருந்த ஷாரிக் தற்பொழுது தலைமுறைவாகியுள்ளான் அவனைப் பிடிக்கும் பணியில் காவல்துறையினர் தனி படை அமைத்து தேடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா பேட்டியளித்துள்ளார்.

அதில், “இன்று சிமோகா மாவட்டத்தில் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முனீர் மற்றும் சையத் யாசின் ஆகிய இருவரை இன்று சிமோகா போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவன் தப்பி ஓடி விட்டான் இவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார். இச்சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | நடு ரோட்டில், பெற்ற தந்தையை கட்டையால் அடித்த கொடூரக்காரன்!! வைரல் வீடியோ!