
கோவை மாவட்டம், ராமநாதபுரம் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கோவை மாவட்ட பாஜக நெசவாளர் அணிச் செயலாளராக பதவி வகித்தவர் ஆவார்.
கடந்த 11 ஆண்டுகளாக ராமநாதபுரம் பகுதியில் போட்டோ ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வரும் ஜெயக்குமார், பாஜக உட்கட்சி தேர்தலில் போட்டியிடக் கூடாது என, அக்கட்சி உறுப்பினர்கள் சிலர் மிரட்டியுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 30ஆம் தேதி ஜெயக்குமாரின் ஸ்டுடியோவுக்கு வந்த பாஜகவை சேர்ந்த கார்த்திக் மற்றும் முத்துக்குட்டி ஆகியோர், தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜெயக்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும், அவரை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன், ராமநாதபுரம் காவல் நிலையத்தில் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார்.