பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கு.. சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

சென்னையில் பா.ஜ.க. நிர்வாகி பாலச்சந்திரன் கொலை வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்காத சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கு.. சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பாஜக நிர்வாகி பாலச்சந்திரன், கடந்த 24 ஆம் தேதி இரவு 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

தொழில் போட்டி காரணமாக பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், எடப்பாடி பகுதியில் தலைமறைவாக இருந்த பிரதீப், சஞ்சய், கலைராஜன், ஜோதி ஆகிய 4 பேரை கைது செய்தனர். மீதமுள்ள குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதனிடையே, பணியின்போது கவனக் குறைவாக இருந்த பாலச்சந்திரனின் பாதுகாப்பு காவலர் பாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக பாலச்சந்திரன் கொலை வழக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியனை பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.