கேக் ஆர்டர் செய்வது போல் நடித்து நகை பறித்த ஆட்டோ டிரைவர் !!

திருவேற்காட்டில் கேக் ஆர்டர் செய்வது போல் நடித்து நகை பறித்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கேக் ஆர்டர் செய்வது போல் நடித்து நகை பறித்த ஆட்டோ டிரைவர் !!

மதுரவாயலை சேர்ந்தவர் நீலா திருவேற்காடு பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார் இவரது கடைக்கு கடந்த 2 தினங்களுக்கு முன் வந்த மர்ம நபர் கேக் ஆர்டர் செய்வது போல் நீலாவிடம் பேசியுள்ளார். அப்போது அவர் அசந்த நேரம் பார்த்து அவர் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

இந்த சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசில் புகார் அளித்ததின் பேரில் திருவேற்காடு போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை தீவிரமாக தேடி வந்த நிலையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் தி நகரைச் சேர்ந்த ஏழுமலை  என்ற துரை, என்பதும் ஆட்டோ ஓட்டி வந்த இவர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது இவரிடமிருந்து செயின் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.