பெட்ரோல் பங்கில் கொள்ளை முயற்சி..ஊழியருக்கு அரிவாள் வெட்டு...தப்பியோடிய கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

காஞ்சிபுரம் அருகே பெட்ரோல் பங்கில் கொள்ளை அடிக்க முயற்சி செய்த கொள்ளையர்கள், ஊழியரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற 5 பேரில், மூவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பெட்ரோல் பங்கில் கொள்ளை முயற்சி..ஊழியருக்கு அரிவாள் வெட்டு...தப்பியோடிய கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

காஞ்சிபுரம் அருகே புறவழி சாலையில் உள்ள கீழ்கதிர்பூர் பகுதியில்  நயாரா என்ற பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இந்த பங்கில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதற்கிடையில் நேற்று நள்ளிரவில் பெட்ரோல் பங்கிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து இளைஞர்கள், பெட்ரோல் பங்கில் படுத்திருந்த ஊழியரிடம் திருவண்ணாமலை பருவதமலை செல்ல வழி கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் வ 5 பேரும் பெட்ரோல் பங்கில் கொள்ளையடிக்கும் முயற்சியில்  மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக வெட்ட துவங்கினர்.  ஊழியரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், தப்பியோடிய மூவரையும் விரட்டி பிடிக்க முயற்சித்தனர். ஆனால் மூவரும் தப்பியோடியதாக கூறப்படுகிறது..

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் பங்கில்  கொள்ளையடிக்க முயன்ற 5 நபர்களை தீவிரமாக தேடினர்.  அப்போது வேகவதி பாலம் அருகே  நின்றிருந்த மூன்று நபர்களை  பொதுமக்கள் உதவியுடன் காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் பெட்ரோல் பங்கில் கொள்ளையடிக்க வந்த கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

பிடிபட்ட மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 2 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். தப்பியோடிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.