வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி - கைரேகையில் பிடிப்பட்ட கொள்ளையன்!!

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி - கைரேகையில் பிடிப்பட்ட கொள்ளையன்!!

சென்னை பெரம்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த நபரை கைரேகை மூலம் போலீசார் கைது செய்தனர். பெரம்பூர் அடுத்த எம்.கே.பி நகரை சேர்ந்த மூர்த்தி என்பவர், கடந்த 10-ஆம் தேதி குடும்பத்துடன் காஞ்சிபுரம் சென்றுள்ளார். திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த  2 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளைப் போனது தெரியவந்தது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையில் ஈடுபட்டது கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், 2 சவரன் நகைகள் மற்றும் 10ஆயிரம் ரூபாய்  ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.