மனநிலை பாதிக்கப்பட்ட நபர்...ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த கொடூர நிகழ்வு!

மனநிலை பாதிக்கப்பட்ட நபர்...ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த கொடூர நிகழ்வு!

நீலகிரி மாவட்டம் உதகை நகர பேருந்து நிலையத்தில், பட்டப்பகலில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதகை அடுத்த மஞ்சனக்கோரை பகுதியை சேர்ந்த ஹரி மற்றும் கார்த்திக் ஆகியோர், பேருந்தில் உதகைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் பேருந்து நிலையத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர், தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த கார்த்திக், சாலையோர பாத்திரக்கடையில் இருந்த கத்தியை எடுத்து ஹரியை குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஹரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, கார்த்திக்கை கைது செய்தனர். விசாரணையில் கார்த்திக் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.