மாமனார் வீட்டிற்கு சென்ற மாப்பிளைக்கு அருவா வெட்டு ; காயத்துடன் ரயில் ஏறி தப்பியோட்டம்...

மாமனார் வீட்டிற்கு சென்ற மாப்பிளைக்கு அருவா வெட்டு ; காயத்துடன் ரயில் ஏறி தப்பியோட்டம்...

ஆந்திராவில் வெட்டப்பட்ட ரவுடி, வெட்டு காயங்களுடன் ரயிலில் பயணித்து சென்னைக்கு வந்ததால் இன்று காலை முதல் சென்ட்ரல் ரயில்வே நிலையம் பரபரப்பாக காணப்படுகிறது.

சென்ட்ரலில் ரத்தம் சொட்ட சொட்ட பயணித்த ரவுடி :

சென்னை : மக்கள் அதிகமாக கூடும் சென்னையின் மைய பகுதியான சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் இன்று காலை வெட்டு காயங்களுடன் ரத்தம் சொட்ட சொட்ட ஒரு வாலிபர் இருந்துள்ளார். இதனை கண்டு அச்சமடைந்த பயணிகள் ரயில்வே போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அந்த வாலிபரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்திய போது, வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி சரத்(23) இவர்தான் என்பதும், இவர் மீது சென்னை ஆர்.கே.நகர், வண்ணாரப்பேட்டை, யானைக்கவுனி உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளதும், இந்த வழக்கில் தீவிரமாக சரத்தை போலீசார் தேடி வருவதும் தெரியவந்துள்ளது.

மேலும் தெரிந்து கொள்ள : https://malaimurasu.com/another-attempt-murder-in-kumari

குடிபோதையால் அருவா வெட்டு :

இந்நிலையில் கடந்த 14ம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள தர்மசால் குண்டா என்கிற இடத்தில், சரத் தனது மாமனாரின் இறுதி சடங்கிற்கு கலந்து கொள்ள சென்றுள்ளார்.இறுதி சடங்கின் போது குடிபோதையில் அங்கு இருந்தவரிடம் தகராறு ஏற்பட்டு  அங்கிருந்த கும்பல் ஒருவரை ஒருவர் மாறி மாறி கத்தியால் வெட்டி கொண்டதில் தலை,முகம்,கை,கால் ஆகிய இடங்களில் சரத்துக்கு வெட்டு விழுந்துள்ளது. 

மேலும் தெரிந்து கொள்ள :https://malaimurasu.com/shraddha-case-investigation

ரயில் ஏறி தப்பித்து போலீஸிடம் சிக்கிய ரவுடி :

 ரத்தம் சொட்ட சொட்ட காயமடைந்த சரத் தப்பித்து நெல்லூர் ரயில் நிலையம் வந்து,அங்கிருந்து கருடாத்ரி விரைவு ரயிலில் ஏறி, இன்று காலை 10 மணியளவில்  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்திருப்பதும் தெரியவந்துள்ளது.இதனையடுத்து சரத்தை தேடி வந்த சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்த நிலையில் ,ரயில்வே போலீசார் சரத்தை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.இந்நிலையில் வெட்டு காயத்துடன் ரத்தம் வடிந்தபடி ரயிலில் பயணம் செய்த இந்த சம்பவம் பயணியிரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.