பாலியல் பலாத்கார வழக்கில் கைதான வாலிபர்... ஜாமீனில் வெளிவந்து தூக்கிட்டு தற்கொலை!! காரணம் என்ன?

பாலியல் பலாத்கார வழக்கில் கைதான வாலிபர்... ஜாமீனில் வெளிவந்து தூக்கிட்டு தற்கொலை!! காரணம் என்ன?

பாலியல் வழக்கில் திடீர் திருப்பமாக கைதான வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம்  பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்.  28 வயதாகும் இவர் சமீபத்தில் ஒரு பெண்ணை  திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த வழக்கில் அந்த பெண்ணை ஏமாற்றிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் பாலியல் வழக்கில் கைதான ஆனந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளிவந்துள்ளார். ஆனால் இவர் வெளிவந்த நாள் முதலே மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதற்கிடையில் வீட்டில் தனிமையில் இருந்த ஆனந்த் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டு உள்ளார்.

பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆனந்த்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆனந்த்தின் தற்கொலைக்கான காரணத்தை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.