வடமாநில இளைஞர்களுக்குள் தகராறு - ஒருவர் உயிரிழப்பு!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே, வடமாநில இளைஞர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீரானநல்லூர் பகுதியை சேர்ந்த ஹரிதாஸ் என்பவருக்கு சொந்தமான கல் உற்பத்தி செய்யும் இடத்தில், பீகாரை சேர்ந்த 6 இளைஞர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர்.

இதையும் படிக்க : தீபாவளி விடுமுறை ; ரூ. 467 கோடிக்கு மது விற்பனை!

இந்நிலையில் நேற்று இரவு தீபாவளியை ஒட்டி, 6 பேரும் மது அருந்திய நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் பிரமோத்குமார் சஹானி என்ற இளைஞர் தலையில் இரும்பு ராடால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக இருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.