பிரிந்து சென்ற மனைவிகளை பற்றி கேலிப் பேச்சு : கூட்டாளிகளுடன் சேர்ந்து நண்பரை கொன்ற நபர் !!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அருகேள்ள தளவாய்புரம் பகுதியில் கடந்த 23ந்தேதி இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்த வழக்கில், அந்த இளைஞரை அவரது நண்பர் தனது கூட்டாளிகளுடன் அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

பிரிந்து சென்ற மனைவிகளை பற்றி கேலிப் பேச்சு : கூட்டாளிகளுடன் சேர்ந்து நண்பரை கொன்ற நபர் !!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி  அடுத்துள்ள கயத்தாறு அருகே தளவாய்புரம் நாற்கர சாலையோரத்தில் உள்ள கோவில் முன்பு கடந்த 23ந் தேதி வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மல்லியை அடுத்த மானகசேரி பகுதியைச் சேர்ந்த அரிச்சந்திரன் மகன் மகேஸ்வரன் என்பது தெரிய வந்தது. மேலும் அதே ஊரைச் சேர்ந்த செல்வகுமார் கூட்டாளிகளுடன் சேர்ந்து மகேஸ்வரனை கொலை செய்தது தெரியவந்தது. 

மகேஸ்வரனும், செல்வகுமாரும் மீன் லாரி டிரைவர்களாக வேலை செய்தனர்.  செல்வக்குமாருக்கு வளர்மதி, திவ்யா என்ற 2 மனைவிகள், தற்போது 2 மனைவிகளும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 19ந் தேதி மகேஸ்வரனும், செல்வக்குமாரும் விசாகப்பட்டினத்தில் மீன் லோடு ஏற்றுவதற்காக லாரியில் சென்ற இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது மதுபோதையில்,  செல்வகுமாரின் மனைவியை மகேஸ்வரன் அவதூறாக பேசியதால், தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் செல்வக்குமாரை மகேஸ்வரன் தாக்கியதில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மகேஸ்வரனை பழிவாங்க நினைத்த செல்வக்குமார் ஊருக்கு லாரியில் கிளம்பியதும், மதுரை கப்பலூரில் சுங்கசாவடி பகுதிக்கு தனது நண்பர்களை வரவழைத்துள்ளார். அவர்களையும் லாரியில் ஏற்றிக்கொண்டு, கயத்தாறு அருகே தளவாய்புரத்துக்கு மது அருந்த அழைத்து சென்றுள்ளனர். அப்போது மீண்டும் அவர்களுக்கு தகராறு ஏற்பட்டு இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக செல்வகுமார், அவருடைய நண்பர்களான ரஞ்சித், காளிமுத்து ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான முத்து, முத்துப்பாண்டி ஆகிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.