ஆம்புலன்ஸ், ஆட்டோ, பைக் என அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து!!

ஆம்புலன்ஸ், ஆட்டோ, பைக் என அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து!!

கீழ்ப்பாக்கம் அருகே  சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆம்புலன்ஸ், ஆட்டோ, பைக் என அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை வழியாக நேற்றிரவு சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.  பின்னர் அந்த கார் அவ்வழியே சென்ற ஆட்டோ, இருசக்கர வாகனம் என அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியதுடன் சாலையில் நடந்து சென்ற பாதசாரி மீது மோதி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.  

இதில் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளான ராஜி, ஹேமலதா, பாபு, பிரதாப், கனகராஜ், செந்தில்கணேஷ், யோகேஷ் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர்.  பின்னர் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

பின்னர் இவ்விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போக்குவரத்து போலீசார் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரை பிடித்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில் அவர் கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த தாமஸ்(75) என்பது தெரியவந்தது.  மேலும் சக்கரை நோயால் பாதிக்கப்பட்ட முதியவர் தாமஸ் மாதந்தோறும் மைலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று உடல்  பரிசோதனை செய்து வருவதும்,நேற்று வழக்கம் போல் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வரும் வழியில் திடீரென ரத்த அழுத்தம் அதிகமானதால் காரை ஓட்டமுடியாமல் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது.  இதனையடுத்து போலீசார் கார் ஒட்டுர் தாமஸ்சை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க:  வனத்துறை மீது குற்றஞ்சாட்டிய செந்தில் பாலாஜி..!!!