உறவினரின் கை விரல்களை வெட்டிய நபருக்கு வலைவீச்சு...

முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கியதில் விரல் துண்டிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உறவினரின் கை விரல்களை வெட்டிய நபருக்கு வலைவீச்சு...

புதுக்கோட்டை | ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்திவிடுதியில்  வசித்து வரும் ரெங்கதுரைக்கும் அவரது உறவினரான கருப்பையா என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

அதே போல இன்று காலை ரெங்கதுரை (45) மற்றும் கருப்பையா (26) இடையே கடுமையான  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கருப்பையா மற்றும் ரெங்கதுரை இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 10 வயது மகனை வீட்டிலேயே 3 வருடங்கள் பூட்டி வைத்த தாய்…

கைகலப்பு முற்றிய நிலையில் அரிவாளை எடுத்து வந்து ரெங்கதுரையை கருப்பையா சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் ரெங்கதுரைக்கு வலது கையில் இரண்டு விரல்கள் துண்டாகி விழுந்துள்ளது. சம்பவத்தைப் பார்த்த  அக்கம்பக்கத்தினர் வெட்டுப்பட்ட ரெங்கதுரையை உடனடியாக மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு ரெங்கதுரைக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் துண்டான விரல்களை தனி ஐஸ்பெட்டியில்  அடைத்து மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அறிவாளால் வெட்டிய கருப்பையா என்ற இளைஞரை ஆலங்குடி போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தின் காரணமாக ஆலங்குடி பகுதியில் கடும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

மேலும் படிக்க | உண்டியலை திருடி சென்ற இருவரின் சிசிடிவி வெளியீடு...