திருநங்கை நடிகை தூக்கிட்டு தற்கொலை - தலைமறைவாகி உள்ள காதலனுக்கு போலீசார் வலைவீச்சு!

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த நடிகையும், மாடலுமான திருநங்கை ஷெரின் செலின் மேத்யூ தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருநங்கை நடிகை தூக்கிட்டு தற்கொலை - தலைமறைவாகி உள்ள காதலனுக்கு போலீசார் வலைவீச்சு!

கொச்சி பாலேரி வட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திருநங்கை ஷெரின் செலின் மேத்யூ வசித்து வந்தார். இந்நிலையில் அவர் தனது குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டறியப்பட்டார். நண்பர்களுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்த அவர், தனது இணையதள கணக்குகளில் மனவருத்தத்துடன் பல பதிவுகளை பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, ஷெரினுக்கு ஒரு காதலன் இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், தலைமறைவாகியுள்ள ஷெரினின் காதலனை பாலாரிவட்டம் போலீசார் தேடி வருகின்றனர்.