இதற்கெல்லாமா பயன்படுது கூகுள் மேப்... ஏடிஎம் கொள்ளையர்களின் அதிர்ச்சி தகவல்கள்...
ஏடிஎம் கொள்ளையர்கள் கூகுள் மேப்பை பயன்படுத்தி கொள்ளையடித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

9 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பள்ளி மாணவியின் உடல், வெறும் எலும்புக்கூடுகளாக நடுக்காட்டுப்பகுதியில் கிடைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
தர்மபுரி | அரூர் வட்டத்திற்கு உட்பட்ட எஸ்.அம்மாபாளையம் அடுத்த முள்ளிகாடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி பெருமாள். இவருடைய மகள் ஞானசௌந்தர்யா கோயமுத்தூரில் கடந்த 9 மாதத்திற்கு முன்பு பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
அப்போது இவருடைய பொது தேர்வை முடித்துவிட்டு தனது சொந்த கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு வந்து பங்கேற்றுள்ளார். திருவிழா நடைபெறும் பொழுதே இவர் காணாமல் போனதாகவும், தனது மகளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என தெரிவித்து இவருடைய பெற்றோர் கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்தனர்.
மேலும் படிக்க | பெண்ணை அரிவாளால் வெட்டி 16 சவரன் தங்க நகை கொள்ளை அடித்த கொடூரம்...
பின்பு காவல்துறையினர் மற்றும் இவருடைய பெற்றோர் உறவினர்கள் என அனைவுரும் கோயமுத்தூர், திருப்பூர், அரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எங்கு தேடியும் மாணவி குறித்து எந்த ஒரு தகவலும் சேகரிக்க முடியவில்லை.
தன்னுடைய மகள் உயிரோடுதான் யாருடைய பாதுகாப்பிலோ உள்ளார் என எண்ணியிருந்த இவருடைய தந்தை பெருமாளுக்கு பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒருவர், எஸ் அம்மாபாளையம் அருகே உள்ள மலைப்பகுதியில் ஒரு சடலம் தூக்கில் தொங்கப்பட்டு இருந்ததாகவும், ஆனால் உடல்கள் தசைப்பகுதிகள் எதுவும் இல்லாமல் ஒருசில எலும்புக்கூடுகள் மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளார்.
எனவே தனது மகளாக இருக்குமோ என எண்ணி இவருடைய தந்தை மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது தனது மகள் தான் என்று உறுதி செய்தனர்.
மேலும் படிக்க | புதுமணப்பெண் தற்கொலை முயற்சி... போலீசார் விசாரணை...
இது குறித்து கோட்டப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பெயரில் சோதனை செய்து மருத்துவ குழுவினரை வரவழைக்கப்பட்டு அங்கு இருந்த பெண்ணின் எலும்பு கூடுகளை மற்றும் அவர் பயன்படுத்திய வாட்ச் உள்ளிட்டவர்களை சேகரித்து டி என் ஏ டெஸ்ட் மற்றும் உடற்கூறு ஆய்விற்காக எடுத்துச் சென்றனர்.
மேலும் இந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் இது தற்கொலை அல்ல இந்த கொலையில் யார் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பெண்ணின் உடல் அடர்ந்த காட்டுப் பகுதியில் வெறும் எலும்பு கூடுகள் மட்டுமே கிடைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
மேலும் படிக்க | பரியேறும் பெருமாள் தந்தை காலமானார்...
65 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலரை எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்று பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் இளையராஜா சந்தேகத்திற்கிடமாக சுற்றிய நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளார். அவரிடம் ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் இல்லாத காரணத்தினால் அவரிடம் உள்ள உடமைகளை சோதனை மேற்கொண்டுள்ளார்கள். அதில் கட்டு கட்டாக அமெரிக்க டாலர்கள் இருந்தது தெரியவந்தது.
உடனடியாக எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சிவனேசன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள் விசாரணையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஜமீல் அகமத் என்பதும், மேலும் அவரிடம் உள்ள கைப்பையை ஸ்கேனர் இயந்திரம் மூலம் சோதனை செய்ததில் 80 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் இருந்தது தெரியவந்தது. இதனுடைய இந்திய மதிப்பு 65,44,000 ரூபாய் எனவும் இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சிவனேசன் ஜமீல் அஹ்மத் மற்றும் அவர் கொண்டு வந்த 65 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் அமலாக்கத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: அண்ணா நினைவுதினம்.... நினைவிடத்தில் முதலமைச்சர் அஞ்சலி!!!
திருவண்ணாமலை அருகே பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்தனர்.
திருவண்ணாமலை | வந்தவாசி அடுத்த பிருதூர் கிராமத்தில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்ற தனியார் பேருந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்து கொள்ளானதில் 15 பேர் படுகாயம் அடைந்து வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி அருகே கீழ் நெடுங்கள் கிராமத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மேல்மருவத்தூர் பக்தர்கள் தனியார் பேருந்தில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
மேலும் படிக்க | பள்ளி சிறுமி மீது பைக் மோதி விபத்து..!
அப்போது அதிகாலையில் வந்தவாசி - மேல்மருவத்தூர் சாலையில் பிருதூர் கிராமம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15 மேல்மருவத்தூர் பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதை அடுத்து தகவல் அறிந்த வந்தவாசி போலீசார் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 15 மேல்மருவத்தூர் பக்தர்களை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க | அமரராஜா பேட்டரி தொழிற்சாலையில் தீ விபத்து...
இந்த நிலையில் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு பேர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க | பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து - 50 பேர் பலி...
ஸ்ரீபெரும்புதூா் அருகே புது மணப்பெண் உடல் எாிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே வெள்ளகேட் தாமரை தாங்கள் பகுதியைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி வ/27. இவர் கடந்த 4மாதங்களுக்கு முன்பு சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக கணவரை பிரிந்து காஞ்சிபுரம் வெள்ளகேட் தாமரை தாங்கள் பகுதியில் உள்ள தனது அம்மா வீட்டில் இருந்து வந்த நிலையில் இன்று பிரியதர்ஷினி தன்னுடைய அம்மாவிடம் சென்னையில் உள்ள கணவர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு வந்துள்ளார்.
மேலும் படிக்க | கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட தம்பதியினர் - போலீசார் விசாரணை
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையொட்டி பென்னலூர் பஸ் நிறுத்தம் பின்புறம் பிரியதர்ஷினி 90% தீக்காயங்களுடன் மீட்டுள்ளனர்.
பின், 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க | தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை - போலீசார் விசாரணை
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு கிடந்த பெட்ரோல் கேன், தங்க தாலி, கைப்பை, செல்போன் ஆகியவை கைப்பற்றி, பிரியதர்ஷினி தானாகவே பெட்ரோல் ஊற்றி கொளுத்திக் கொண்டாரா? அல்லது யாரேனும் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விட்டார்களா? என பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
மேலும் ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண் பெட்ரோல் ஊற்றி கொளுத்திக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | புதிய சுடுகாடு அமைப்பதில் மோதல்; தடியடி நடத்திய போலீஸ்
பெரம்பலூர் மாவட்டத்தில் வயதான தம்பதியினர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொண்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாணிக்கம் - மாக்காயி தம்பதியினர். இவர்களது மூன்று பெண் பிள்ளைகளும் திருமணமாகி சென்று விட்ட நிலையில், இருவரும் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை மாணிக்கம், மாக்காயி இருவரும் வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.