ட்ரையல் பார்த்துட்டு பணம் கொடுப்போம் : வடிவேலு பட பாணியில் ஜீப்பை திருடி மாயமான நபர் !!

சென்னையில் வடிவேலு பாணியில் டெஸ்ட் டிரைவ் செய்வதற்காக 8 லட்சம் ரூபாய் மதிப்புடைய ஜீப்பை மர்ம நபர் திருடி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ட்ரையல் பார்த்துட்டு பணம் கொடுப்போம் : வடிவேலு பட பாணியில் ஜீப்பை திருடி மாயமான நபர் !!

வடிவேலு படம்

நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் இருசக்கர வாகனத்தை விலை குறைத்து பேச வருமாறு அழைத்துச் செல்வார்கள். வண்டியை ட்ரையல் பார்த்து பின்னர் வண்டிக்கான தொகையை கொடுத்துக் கொள்ளலாம் என வடிவேலு கூறுவார். டெஸ்ட் டிரைவ் பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற இரண்டு பேரும் மாயமாவதும், அதன் பின்னர் வண்டி உரிமையாளர் வடிவேலு அடித்து துவைப்பது போன்ற காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கும். இதேபோன்று கார் விற்பனை செய்யும் ஊழியரின் கவனத்தை திசை திருப்பி ஜீப்பை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கார் விற்கும் கடை

சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தர பாண்டியன் இவர் இதே பகுதியில் சாய் கார்  என்ற பெயரில் பயன்படுத்தப்பட்ட கார்களை கமிஷன் அடிப்படையில் விற்கும் ஷோரூம் ஷோரூம் வைத்து நடத்தி வருகிறார் இந்த ஷோரூமில் ஹோண்டா சிட்டி, ஷிப்ட்  உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்கள் வாடிக்கையாளர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. 

வக்கீல்  முருகன்

இந்த ஷோரூம்க்கு, வந்த மர்ம நபர் ஒருவர் தன் பெயர் முருகன் என்றும், தன்னை வக்கீல் என்று அறிமுகம் செய்துக் கொண்டு, அட்வகேட் எனக் கூறிக்கொண்டு கார் வாங்கும் வேண்டுமென்ற ஆசையில் உங்களிடம் வந்திருக்கிறேன் எனக் கூறி உடனடியாக தனக்கு ஹோண்டா சிட்டி கார் வேண்டும் என கேட்டிருக்கிறார். உடனடியாக கடையில் பணிபுரியும் தனிஷ் என்ற ஊழியருடன் அந்த காரை எடுத்துக் கொண்டு சிறிது தூரம் டெஸ்ட் டிரைவ் செய்திருக்கிறார்.

டெஸ்ட் டிரைவ்

அந்த கார் எனக்கு பிடிக்கவில்லை எனக்கொரு மீண்டும் ஷோரூமுக்கு வந்து வெளியே அழகான தோற்றத்தில் 8 லட்சம் மதிப்புடைய ஜீப் நல்லா இருக்கிறது எனக்கூறி இந்த காரை ஓட்டி பார்ப்பதற்காக முருகன் என்பவர் மீண்டும் ஊழியருடன் எடுத்துச் சென்றார்.

மாமா மண்டபம்

பின்னர் ஜீப்பை ஒட்டி சென்ற பொழுது அருகில் இருந்த தனியார் திருமண மண்டபத்தை பார்த்து, இது என் மாமா திருமண மண்டபம் எனக் கூறி உடன் இருந்த ஊழியர் தனிஷை திசை திருப்பி, பாடி மேம்பாலம் அருகே யூ டர்ன் அடித்து நிறுத்திவிட்டு, மண்டபத்தின் மேனேஜரிடம் மண்டபத்தை புக்கிங் செய்து வந்திருப்பதாகவும், அதேபோன்று கார் ஷோரூமின் ஊழியர் தனிஷிடம் மண்டபத்தின் மேனேஜர் தனது சொந்தக்காரர் என பேசிக் கொண்டிருங்கள் சிக்னலை சுற்றி வருகிறேன் எனக் கூறி கவனத்தை திசை திருப்பி, ஜீப்பை நிமிடத்தில் திருடி சென்றிருக்கிறார்.

எஸ்கேப் ஆன முருகன்

பின்னர் நீண்ட நேரம் ஆகியும் ஜீப்பை ஓட்டிச் சென்ற முருகன் என சொல்லக்கூடிய அந்த மர்ம நபர் காருடன் திரும்பி வராததால் தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்த ஷோரூமின் ஊழியர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஆட்டோ ஓட்டுநரை பார்த்து இங்கு நின்ற கருப்பு கலர் ஜீப் காரை பார்த்தீர்களா என்று கேட்ட பொழுது யாரும் நாங்கள் பார்க்கவில்லை என்று கூறியதில் அதிர்ச்சியடைந்த ஊழியர் அந்தக் காரை எடுத்துச் சென்றவர் யார் என்று பார்ப்பதற்காக தனது ஷோரூமில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை பார்த்த பொழுது அது இரண்டு நாட்களுக்கு முன்பதாகவே பழுதடைந்து இருப்பதையும் கண்டறிந்தனர்.

இந்த சம்பவத்தைக் குறித்து உடனடியாக தனது ஷோரூம் உரிமையாளரிடம் தகவல் தெரிவித்த நிலையில் சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அந்த மர்ம நபர் யார் என போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.