சேற்றில் புதைந்து கிடந்த ஆண் சடலம்...! போலீசார் தீவிர விசாரணை...!

திண்டிவனத்தில் சேற்றில் புதைந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு...

சேற்றில் புதைந்து கிடந்த ஆண் சடலம்...! போலீசார் தீவிர விசாரணை...!

திண்டிவனத்தில் உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகம் அருகில் சேற்றில் புதைந்த நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற ரோஷனை போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற் கூறு ஆய்விற்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கம் அடுத்த நாட்டேரி கிராமத்தைச் சேர்ந்த ஆதிமூலம் என்பவரது மகன் மணிகண்டன் என்பது தெரியவந்தது. மேலும் இவர் கடந்த 27- ஆம் தேதி தனது வீட்டில் இருந்து பண்ருட்டிக்கு சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை என இவரது சகோதரர் திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதும் விசாரணையில்  தெரியவந்துள்ளது. மேலும் இறந்தவர் தனியாக வந்தாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.